தேனியில் வரும் 27ல் வருவாய் தீர்வாயம் முகாம்
தேனியில் வரும் 27ல் முதல் ஜூலை 5 வரை வருவாய் தீர்வாயம் முகாம் நடக்கிறது.
தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 27.06.2024 முதல் 05.07.2024 வரை (29.06.2024, 30.06.2024 மற்றும் 01.07.2024) ஆகிய நாட்கள் நீங்கலாக 1433 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது.
உத்தமபாளையம் வட்டத்தில் பூலானந்தபுரம், சின்னமனூர், கருங்காட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம் கிராமங்களுக்கு 27.06.2024 அன்றும், தேவாரம், தேவாரம் மலை, தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், பொட்டிபுரம், சங்கராபுரம் கிராமங்களுக்கு 28.06.2024 அன்றும், க.புதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம், மேலக்கூடலூர் (தெற்கு), மேலக்கூடலூர் (வடக்கு), கீழக்கூடலூர் (மேற்கு), கீழக்கூடலூர் (கிழக்கு) கிராமங்களுக்கு 02.07.2024 அன்றும், அனுமந்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி (தெற்கு), நாராயணத்தேவன்பட்டி (வடக்கு), நாராயணத்தேவன்பட்டி மலை, காமயக்கவுண்டன்பட்டி, குச்சனூர், புலிக்குத்தி, மார்க்கையன்கோட்டை கிராமங்களுக்கு 03.07.2024 அன்றும், வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, அழகாபுரி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் (மலை) கிராமங்களுக்கு 04.07.2024 அன்றும், கோம்பை (கிழக்கு), கோம்பை (மேற்கு), மல்லிங்காபுரம், உத்தமபாளையம் (தெற்கு), உத்தமபாளையம் (வடக்கு), கோகிலாபுரம், இராயப்பன்பட்டி, கிராமங்களுக்கு 05.07.2024 அன்றும் வருவாய் தீர்வாயம் தேனி மாவட்ட ஆட்சி தலைவரால் நடத்தப்படவுள்ளது. பெரியகுளம் வட்டத்தில் கெங்குவார்பட்டி பகுதி-1, கெங்குவார்பட்டி பகுதி -2, தேவதானப்பட்டி பகுதி- 1, தேவதானப்பட்டி பகுதி-2, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி கிராமங்களுக்கு 27.06.2024 அன்றும், ஜெயமங்கலம் பகுதி - 1, ஜெயமங்கலம் பகுதி - 2 குள்ளப்புரம், மேல்மங்கலம் பகுதி-1, மேல்மங்கலம் பகுதி-2 கிராமங்களுக்கு 28.06.2024 அன்றும், கீழவடகரை, வடகரை பகுதி- 1, வடகரை பகுதி- 2, தென்கரை பகுதி- 1, தென்கரை பகுதி-2 கிராமங்களுக்கு 02.07.2024 அன்றும், எ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம் பகுதி-1, தாமரைக்குளம் பகுதி-2, வடவீரநாயக்கன்பட்டி கிராமங்களுக்கு 03.07.2024 அன்றும் வருவாய் தீர்வாயம் தேனி, மாவட்ட வருவாய் அலுவலரால் நடத்தப்படவுள்ளது. தேனி வட்டத்தில் ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி, கிராமங்களுக்கு 27.06.2024 அன்றும், கோட்டூர், சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, கிராமங்களுக்கு 28.06.2024 அன்றும், பூமலைக்குண்டு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, கோவிந்தநகரம் கிராமங்களுக்கு 02.07.2024 அன்றும் வருவாய் தீர்வாயம் தேனி உதவி ஆணையர் (கலால் )நடத்தப்படவுள்ளது.
ஆண்டிபட்டி வட்டத்தில், கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி பகுதி1, ஆண்டிபட்டி பகுதி-2 கிராமங்களுக்கு 27.06.2024 அன்றும், புலிமான்கோம்பை, திம்மரசநாயக்கனூர் பகுதி -1, திம்மரசநாயக்கனூர் பகுதி -2 கிராமங்களுக்கு 28.06.2024 அன்றும், மொட்டனூத்து, ஜி.உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு, குன்னூர், வள்ளல்நதி கிராமங்களுக்கு 02.07.2024 அன்றும், கோத்தலூத்து, கொத்தப்பட்டி, இராஜதானி, பழையகோட்டை, இராமகிருஷ்ணாபுரம், பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, கணவாய்பட்டி கிராமங்களுக்கு 03.07.2024 அன்றும், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மேகமலை கிராமங்களுக்கு 04.07.2024 அன்றும் வருவாய் தீர்வாயம் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் நடத்தப்படவுள்ளது. போடிநாயக்கனூர் வட்டத்தில் இராசிங்காபுரம், சிலமலை, போ.அம்மாபட்டி கிராமங்களுக்கு 27.06.2024 அன்றும், போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம், கோடாங்கிபட்டி, உப்புக்கோட்டை கிராமங்களுக்கு 28.06.2024 அன்றும், டொம்புச்சேரி, கூழையனூர், போடிநாயக்கனூர், மேலச்சொக்கநாதபுரம், போடி மேற்குமலை கிராமங்களுக்கு 02.07.2024 அன்றும், கொட்டக்குடி, போடி வடக்குமலை, அகமலை கிராமங்களுக்கு 03.07.2024 அன்றும் வருவாய் தீர்வாயம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் நடத்தப்படவுள்ளது. மேற்கண்ட வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் பிற துறைகள் தொடர்பான அனைத்து குறைகளையும் மனுக்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.