ரிக் வண்டி டிரைவர் தற்கொலை - போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரிக் வண்டி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2023-12-22 04:24 GMT

தற்கொலை 

ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலை நேருநகர் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவருடைய மகன் பாலமுருகன் (40), இவர் வடமாநிலங்களுக்கு சென்று ஆழ்துளை கிணறு அமைக்கும் ரிக் வண்டி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பாலமுருகன் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டு இருந்தாராம். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை தூக்கில் இருந்து இறக்கினர்.

Advertisement

தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாலமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலமுருகன் குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கணவன்- மனைவி இடையே தகராறா? கடன் தொல்லையா அல்லது வீட்டில் என்ன பிரச்சினை இருந்தது என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News