பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம்
குமாரபாளையத்தில் பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.;
Update: 2024-01-04 07:08 GMT
பட்டுப்போன மரம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் பெரிய அளவிலான மரம் காய்ந்த நிலையில் உள்ளது. இதன் காய்ந்த கிளைகள் எதிரில் உள்ள வீடுகளின் மேல் பரவியது. அருகில் உள்ள நில அளவை தாசில்தார் அலுவலகம் மீதிலும் இதன் கிளைகள் படர்ந்தன. எந்நேரமும் ஒடிந்து விடும் நிலையில் உள்ளது. இதனை அகற்ற ஆர்.டி.ஒ. வசம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், நேரில் வந்து ஆர்.டி.ஒ. சுகந்தி ஆய்வு மேற்கொண்டு, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மரத்தை வெட்ட அறிவுறுத்தினார். ஆனால் இந்த மரம் இதுவரை வெட்டப்படாமல் உள்ளது. எந்நேரமும் ஒடிந்து, சாலையில் செல்வோர் மீது விழும் நிலையில் உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த பட்டுப்போன மரத்தை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டு என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.