பள்ளிப் பேருந்து ஓட்டுனருக்கான சாலை விழிப்புணர்வு முகாம்
வெண்ணைமலையில், பள்ளிப் பேருந்து ஓட்டுனருக்கான சாலை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பள்ளிப் பேருந்துகள் ஓட்டுனருக்கான சாலை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சாலை பாதுகாப்பு துறை & பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய, பள்ளிப் பேருந்துகள் ஓட்டுனருக்கான சாலை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கரூர் அடுத்த வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில், கரூர் சாலை பாதுகாப்பு துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து, சாலை விழிப்புணர்வு முகாம் நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி வரவேற்புரை ஆற்றினார் .கொங்கு மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாலு குருசாமி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு விளக்க உரையை மண்டல போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறை ஆய்வாளர்கள் வழங்கினர். பேராசிரியர் கவிதா, தீபம் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் போதும், இறக்கி விடும் போதும், பயணம் செய்யும்போதும் அந்த பேருந்து ஓட்டுநர், அந்த பேருந்து பெண் கண்காணிப்பாளரும் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், விபத்துக்கள் நடைபெறுவதற்கான சூழ்நிலைகள் எது? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், சாலை விபத்து குறித்த, விழிப்புணர்வு குறும்படம் ஓட்டுனர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இறுதியில் சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். விபத்துகளை தடுப்போம். என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பெண் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.