சாலை மறியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு
மயிலாடுதுறை அருகே மின் இணைப்பு வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறையில் இந்து அறநிலையத்துறை மற்றும் ஆதீனத்துக்கு சொந்தமான அடிமனை குடியிருப்போர் சங்கத்தினர் குடியிருப்பிற்கான மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் செய்யும்போது நில உரிமையாளரிடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் சோழம்பேட்டையை அடுத்துள்ள சித்தர் காடு மின்வாரிய அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவு மாவட்ட செயலாளர் துரைராஜ், ராயர், மேகநாதன், இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம், ரவிச்சந்திரன் உட்பட 50 க்கு மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் மயிலாடுதுறை கும்பகோணம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா மின்வாரிய அதிகாரிகள் பேச்சு நடத்தியதில் மின் இணைப்பிற்கான விண்ணப்பமளிக்கலாம் உரிய அனுமதி வழங்கப்படும் என்று கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது இது குறித்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா அளித்த புகாரின் பேரில் காவல்துறை அனுமதி பெறாமல் சாலையை மறித்து போக்குவரத்து இடைஞ்சலை செய்ததாக இரண்டு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.