மருத்துவர் நகரில் அனுமதி இன்றி சாலை மறியல் போராட்டம்.
கரூர் மருத்துவர் நகரில் அனுமதி இன்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட. 70 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;
மருத்துவர் நகரில் அனுமதி இன்றி சாலை மறியல் போராட்டம்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, மருத்துவர் நகரில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் தோறும் மழை நீர் புகுந்தது. பின்னர் கழிவுநீரும் அதனுடன் கலந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்தது. அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை 11 மணியளவில் கரூர்- ஈரோடு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்த முறைப்படி காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால், அனுமதியின்றி போராட்டம் நடத்தி, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்திய மருத்துவர் நகரை சேர்ந்த பரமேஷ், ஹரிஷ் உள்ளிட்ட 70 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.