ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் பொதுமக்களால் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
அரியலூர், ஏப்.22- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் 6 மற்றும் 7-வது வார்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் ஒரே ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு அங்குள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது தற்போது ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டார் பம்ப் இரண்டும் அடிக்கடி ரிப்பேர் ஆவதாலும் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் ஏற்ற முடியாத சூழல் இருப்பதால் போதிய குடிநீர் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதில் புது மோட்டார் மாற்றாமல் அதே மோட்டாரையே மீண்டும் மீண்டும் பழுது பார்த்தும் மேலும் பத்து நாளைக்கு ஒரு முறை ரிப்பேர் பார்த்து ஆழ்குழாயில் இறக்கப்படுகிறது மீண்டும் அது ரிப்பேர் ஆகிறது இதனால் நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்ற முடியாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
கடந்த ஒரு மாதமாக குடிக்க குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.குடிநீர் தட்டுப்பாடை தவிர்க்க பக்கத்து கிராமத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் - செந்துறை சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மரியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் ஜெயங்கொண்டம் டு செந்துறை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இகுறித்து பகுதி மக்கள் கூறும்போது கூறும்போது :- புதுக்குடி கிராமத்தில் 6, 7 -வது வார்டில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம் இங்கு ஒரே ஒரு நீர்த்தேக்க தொட்டி உள்ளது இந்த நீர்த்தக்க தொட்டியில் பழைய மோட்டாரையே திரும்பத் திரும்ப ரிப்பேர் செய்து அதனை பொருத்துவதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது எனவே பழைய மோட்டார் பம்பை மாற்றிவிட்டு புதிதாக இரண்டு மோட்டார் பம்பையும் மாற்றி குடிநீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் மேலும் இதற்கான , உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என அவர்கள் இவ்வாறு தெரிவித்து சென்றனர்..