சரஸ்வதி நகரில் ஜல்லி சாலை
சரஸ்வதி நகரில் ஜல்லி சாலை முடிவுறாத நிலையில் இருப்பதால் கடந்த 2 ஆண்டாக பகுதிவாசிகள் அவதியடைகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-18 13:48 GMT
மக்கள் அவதி
ருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் 7வது தெரு உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாலை சீரமைப்பு பணிக்காக தார்ச்சாலை பெயர்த்து எடுத்து, ஜல்லி கொட்டப்பட்டன. ஆண்டுகள் இரண்டு கழிந்தும், இது வரை சாலை அமைக்கப்படவில்லை. தற்போது, ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகின்றன.
இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், ஜல்லியில் இருந்து பறந்து வரும் புழுதி காற்றால், குழந்தைகள், முதியோர் சுவாச பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.
மழைக்காலத்தில், பல இடங்களில் குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது குறித்து, பல முறை கவுன்சிலரிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் மீது, பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.