ரயில்வே சுரங்க பாலத்தில் சாலை பழுது
வள்ளியூர்- திருச்செந்தூர் சாலை ரயில்வே சுரங்க பாலம் பழுதடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
Update: 2024-02-16 02:10 GMT
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ரயில்வே சுரங்க பாலம் உள்ளது. இந்த பாலத்தின் சாலையில் மழைத்தண்ணீர் செல்வதற்கான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கால்வாய் இரும்பு தகடுகளால் மூடப்பட்டுள்ளது.இந்த பகுதியில் சாலை பழுதடைந்து வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன.மேலும் வேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள் இந்த இரும்பு தகடுகளை கடந்து செல்லும் போது விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.