சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி
போக்குவரத்துத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது;
போக்குவரத்துத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது
போக்குவரத்துத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.அரசு பஸ்சில் அமைக்கப்பட்ட கண்காட்சியில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன்படும் வகையில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது. ஹெல்மெட் அணிவதன் அவசியம். படியில் பயணிப்பதால் ஏற்படும் இழப்புகள்.
மது அருந்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு விழிப்புணர்வு கருத்துகள் கொண்ட படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. கள்ளக்குறிச்சி அரசு பள்ளி, கல்லுாரியைச் சேர்ந்த 100க்கும் மாணவ, மாணவியர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியை கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ரமேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கர், அரசு பஸ் போக்குவரத்துக்கழக மேலாளர்கள் அண்ணாமலை, சிவக்குமார், ஓட்டுநர் பயிற்றுனர் வெங்கடாசலம், தொழிற்சங்க நிர்வாகிகள் கோமதுரை, அன்பழகன், ராமலிங்கம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.