எடப்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம்
எடப்பாடி பேருந்து நிலையத்தில் சங்ககிரி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவர்கள் நாடகம் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
எடப்பாடி பேருந்து நிலையத்தில் சங்ககிரி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவர்கள் நாடகம் வாயிலாக நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியம் தலைமையில் சாலை பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், செல்போன் பேசிக் கொண்டும், குடி போதையிலும் வாகனங்களை ஓட்டினால் ஏற்படும் விபரீதம் குறித்து கல்லூரி மாணவர்களை கொண்டு நடனமாடியும், நாடக வாயிலாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்திய இக்காட்சி மிகவும் தத்துருவமாக இருந்தது.
இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செந்தில்குமார், புஷ்பா ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கி சிறப்பித்தனர். அப்போது எடப்பாடி மற்றும் சங்ககிரி ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர்.