சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
பென்னாகரம் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு நாடக விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் போக்குவரத்து காவல்துறை மற்றும் தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு குறித்து நாடக விழிப்புணர்வு பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி கொடியசைத்து துவக்கிவைத்து பேரணியானது காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் தற்காலிகப் பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்றனர் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கி சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் எமதர்மன் வேடத்தில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் பின்னர் பேரணையின் போது தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்ட மாட்டேன், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்ட மாட்டேன், குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டேன், அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்ட மாட்டேன், இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்ய மாட்டேன், போக்குவரத்து காவலரின் கை சைகைகளை மதித்து நடப்பேன், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க மாட்டேன், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழி கொடுப்பேன், மருத்துவமனை பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்ப மாட்டேன் நான், சாலை விபத்திற்கு காரணமாக இருக்க மாட்டேன், நான் சாலை விதிகளை பின்பற்றுவேன், விபத்துல்லா தமிழகத்தை உருவாக்குவேன் இன்று கோஷங்கள் எழுப்பி பேரணியாகச் சென்றனர்.
பேரணியின் முடிவில் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளானால் என்ன ஆகும் என்று மாணவர்கள் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் இதில் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் உதவி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சின்னசாமி, போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாதப்பன், முருகன் காவல் உதவி ஆய்வாளர் கோபி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் லட்சுமி மற்றும் ஸ்ரீ தேவி மஹா கல்வி தனியார் தொண்டு நிறுவனம் மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்....