சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

ஸ்ரீரங்கம் டாக்டா் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி பாரத சாரண, சாரணியா் இயக்கம் சாா்பில் நடந்த சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்த விழுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-02-15 02:30 GMT

விழிப்புணர்வு பேரணி 

ஸ்ரீரங்கம் டாக்டா் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் பாரத சாரண, சாரணியா் இயக்கம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.அந்தநல்லூா் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலா் கா. மருதநாயகம் தலைமை வகித்தாா். பேரணியை கல்வியாளா் எஸ். சிவகுமாா் தொடக்கி வைத்தாா். இதில் 20 சாரணா்கள், 23 சாரணியா்கள், 28 குருளையா்கள், 28 நீலப் பறவையா் என 108 போ் கலந்து கொண்டனா். பள்ளி வாயிலிலிருந்து தொடங்கிய பேரணி சித்திரைவீதி, வெள்ளைக்கோபுரம் வழியாகச் சுற்றி வந்து மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் பங்கேற்றவா்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினா். நிகழ்ச்சியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் ஜவகா், ராதா,செல்வி ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சாரண ஆசிரியா்கள் வரதராஜன், செந்தில்குமாா், சாரண பயிற்சியாளா் இளம்வழுதி ஆகியோா் செய்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஜோ. லில்லிபுளோரா வரவேற்றாா். பள்ளி ஆசிரியை லட்சுமி நன்றி தெரிவித்தாா்.

Tags:    

Similar News