ரூ 3.35 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணி - எம் எல் ஏ துவக்கி வைப்பு

Update: 2023-11-03 03:34 GMT

சாலை விரிவாக்க பணி துவக்கம்  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநிலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையை கொண்டு முக்கிய சாலைகளை கணக்கெடுத்து அதனை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகளை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பதி குன்றம் கீழ்க்கதிப்பூர் சாலை, பெரும்பாக்கம் சாலைகளில் கடந்த ஓராண்டாக  சாலை உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேட்டுக்குப்பம் பெரும்பாக்கம் சாலை 2023 - 24 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் ரூ 3.35 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தல் பணிக்காக திட்டம் தயாரிக்கப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு இப்பகுதி அதன் துவக்க விழா நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இன்று கலந்து கொண்டு பூமி பூஜை செய்து  பணிகளை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பணிகள் துவங்கி விரைவில் முடிக்கப்படும் என நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பொது மக்களுக்கு வாகன நெரிசலை குறைக்கும் மாற்றுசாலையாகவும் பயன்படுத்தி , பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் பகுதியாக இது இச்சாலை பணி அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், திமுக ஓன்றிய செயலாளர் குமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார் , காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன், நெடுஞ்சாலைத்துறை காஞ்சிபுரம் உட் கோட்ட உதவி பொறியாளர் விஜய், சாலை ஆய்வாளர் தேவராஜ், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News