ரூ.42.07 லட்சத்தில் சாலைப்பணி - எம்எல்ஏ துவக்கி வைப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் கிராமச் சாலை திட்டத்தின் கீழ், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பள்ளத்தூர் ஊராட்சியில், பள்ளத்தூர் ஆதிதிராவிடர் தெரு சாலை ரூ.17 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், கட்டயங்காடு உக்கடை ஊராட்சியில், நடுவிக்குறிச்சி ஆதிதிராவிடர் தெரு சாலை ரூபாய் 24 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் ரூ.42 லட்சத்து 7 ஆயிரத்தை , ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பரிந்துரையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சனிக்கிழமை பணி துவக்கி வைக்கப்பட்டது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து சாலைப்பணியை துவக்கி வைத்தார்.
சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளரும், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவருமான மு.கி.முத்துமாணிக்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், கந்தசாமி, ஒன்றியப் பொறியாளர் மணிமேகலை, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் தனபால், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அமுதா ராஜேந்திரன், கவிதா செல்வக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் வீரத்தமிழன் (பள்ளத்தூர்), விஜயராணி மணிமுத்து (கட்டயங்காடு உக்கடை), ஊராட்சி மன்ற உறுப்பினர் நிர்மலா பாலமுருகன், கிளைக் கழக நிர்வாகிகள் ஜெயபால், சந்திரசேகர், பாலமுருகன், இளமதியன், அறிவழகன், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.