செல்லாண்டிபாளையத்தில் சாலைபணியாளர்கள் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்

செல்லாண்டி பாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-06-11 03:32 GMT

செல்லாண்டி பாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டி பாளையத்தில் உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் செவிந்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதன் மூலம், 3500 க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர் பணியிடம் ஒழிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும், சுங்கச்சாவடி அமைத்து சுங்கவரி தனியார் வசூலிக்க அனுமதிக்காதே என்றும், நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிடு என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில், வேலை வழங்கி வாழ வைக்க வேண்டும் எனவும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, ஆணை வழங்கிட வலியுறுத்தியும், நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படும் பட்சத்தில் சுங்கச்சாவடிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம் அரசு கஜானாவுக்கு செல்ல வேண்டும்.என்பது உள்ளிட்ட சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, மாவட்ட இணை செயலாளர்கள் ராமமூர்த்தி, செல்வராசு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் அன்பழகன், மாநிலத் துணைத் தலைவர் செல்வராணி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News