சிவகங்கையில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2024-02-06 06:35 GMT


சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமுல்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும். வணிகக்குழு தேர்தலை 5 ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும்.

சாலையோர வியாபாரிகளுக்கு கழிவறை, வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். சிவகங்கை நகரில் விடுபட்ட அனைத்து வியாபாரிகளுக்கும் உடனடியாக பெட்டிகளும், வங்கி கடனும் உடனே வழங்கிட வேண்டும். ஆட்டோக்களுக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத்தை உடனே கைவிட வேண்டும்‌. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் வாணிப கழகங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட AITUC சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tags:    

Similar News