வழிப்பறி குற்றவாளி கைது - 45 சவரன் நகை மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு வழிபறி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 45 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-02-09 18:11 GMT

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி பிப்ரவரி 9ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பெரம்பலூர், அனுக்கூர், கீழப்புலியூர், ஏரிக்கரை, எஸ்.ஆடுதுறை, கிழுமத்தூர், ஒதியம், தைக்கால், பீல்வாடி, அருமடல், என் புதூர் மற்றும் வி.களத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக தொடர் வழிபறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில் உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டு, தனிப்படை போலீசார் பெரம்பலூர் அருகே உள்ள ஒதியம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் ராமு(32) என்பவரை கைது செய்தனர்

வி.களத்தூர் அருகே உள்ள வண்ணாரப்பூண்டி சாலையில் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் போடுவதற்காக தள்ளிக் கொண்டு சென்ற பேரளி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இவரை கைது செய்து விசாரித்த போது, இது மட்டுமின்றி மேலும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 45 சவரன் தங்க நகைகளையும், வழிபறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து குற்றவாளி ராமுவை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News