வழிப்பறி குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பெரம்பலூரில் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Update: 2024-05-19 08:10 GMT
பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செஞ்சேரி கிராம பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் ரவிகரன் வயது - 36, என்பவரின் மீது பெரம்பலூர் காவல்நிலையத்தில் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் திருட்டு வழக்கின் குற்றவாளியான ரவிகரன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கற்பகம் மே - 18ம் தேதி குற்றவாளியை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News