ராசிபுரம் அருகே பள்ளி முதல்வர் வீட்டில் கொள்ளை
ராசிபுரம் அருகே தனியார் பள்ளியின் முதல்வர் வீட்டில் கதவை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மசக்காளிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் முதல்வராக இருப்பவர் எம். மோகன்குமார். இவரது மனைவி சுமதியும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும் பள்ளிக்கு சென்று இருந்த நிலையில், அடையாளம் தெரியாத சிலர் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த சுமார் 13 சவரன் நகை, ரொக்கம் ரூ. 2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த இருவரும் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராசிபுரம் டிஎஸ்பி டி.கே.கே. செந்தில்குமார், உதவி ஆய்வாளர் தங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து இது தொடர்பாக கொள்ளையர்கள் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.