சமயபுரம் அருகே சலூன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அவென்யூவில் சலூன் கடையின் பூட்டை உடைத்து 20 கிராம் நகை, 30,000 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;
காவல் நிலையம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் ஒன் டோல்கேட் திருவள்ளுவர் அவென்யூ, ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் 37 வயதான சரவணன். இவர் திருவள்ளுவர் அவென்யூ பகுதியில் கடந்த 15 வருடமாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 19 ம் தேதி இரவு இவர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் சலூன் கடைக்கு திரும்பி வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க சட்டர் உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த 20 கிராம் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து சரவணன் கொள்ளிடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் பேரில் கொள்ளிடம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.