அரசு நிலத்தில் பாறைகள் உடைத்து மண்  திருட்டு 

கன்னியாகுமரி மாவட்டம்,ஞானதாசபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பாறைகள் உடைத்து மண்  திருட்டில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-27 16:49 GMT
பூதப்பாண்டியில் அனுமதியின்றி பாறை உடைத்த பகுதியை ஆய்வு செய்த அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் உள்ள ஞானதாசபுரம் பகுதியில் அரசு சொந்தமான இடத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சட்ட விரோதமாக வெடி வைத்து பாறைகளை உடைப்பதாகவும், மண் எடுக்கப்படுவதாகவும்  தோவாளை தாலுகா தாசில்தார் கோலப்பனுக்கு தகவல் கிடைத்தது. 

அவரது உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்  ராணி நாகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்  கலா  இன்ஸ்பெக்டர் அன்னராஜன் மற்றும் போலீசார் உடன் சம்பவ இடம்  சென்று ஆய்வு செய்தனர்.       

அப்போது அனுமதி இன்றி மண்ணெடுப்பதும் பாறைகளை வெட்டி எடுப்பதும்  தெரிய வந்தது.  அந்த பகுதியில் செங்கல் சூளை  நடத்தி வரும் நாகர்கோவிலை  சேர்ந்த சதீஷ் கிருஷ்ணா (42) என்பவர் தான் இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்தது.      இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கலா பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செய்தனர்.

Tags:    

Similar News