பிரபல ரவுடி கைது
நன்னடத்தை உத்தரவை மீறியதால் பிரபல ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
Update: 2024-05-04 05:18 GMT
நன்னடத்தை உத்தரவை மீறியதால் பிரபல ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் அருகே வீராணம் சின்னனூர் ஆசாரி தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரவுடி முத்துவை போலீசார் சேலம் உதவி கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தி இனிமேல் எவ்வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது என நன்னடத்தை பத்திரத்தில் எழுதி வாங்கப்பட்டது. ஆனால் ரவுடி முத்து வீராணம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே உதவி கலெக்டர் முன்னிலையில் பெறப்பட்ட நன்னடத்தை உத்தரவை மீறியதால் அவரை வருகிற செப்டம்பர் மாதம் 21-ந் தேதி வரை சிறையில் அடைக்க உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் உத்தரவிட்டார்.