குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரௌடியைப் போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Update: 2024-05-29 03:28 GMT

பைல் படம் 

பாலக்கரை முதலியாா்சத்திரம் அருகே நடந்து சென்ற பால் வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியைச் சோ்ந்த அ. குணசேகரன் (56) என்பவரை பாலக்கரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். விசாரணையில், ரௌடி பட்டியலில் உள்ள இவா் மீது லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை, வழிப்பறி, கொலை முயற்சி, அடிதடி, கொலை என 52 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவரது தொடா் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் விதமாக திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, ரௌடி குணசேகரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்தாா்.
Tags:    

Similar News