அரியூரில் ரவுடி கொலை: 4 பேரிடம் போலீசார் விசாரணை!

பிரபல ரவுடி ராஜா வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-07-04 04:01 GMT

பைல் படம் 

வேலூர் அடுத்த அரியூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான எம்எல்ஏ ராஜா (எ) ராஜ்குமார் (42). இவர் மீது பல்வேறு கொலை,வழிப்பறி,கடத்தல் போன்ற வழக்குகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரவுடி ராஜா அரியூர் மெயின் ரோட்டில் உள்ள டீ கடையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றபோது அம்பேத்கர் சிலை அருகே எதிரே காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர்.

Advertisement

இதில் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்த ரவுடி ராஜாவை காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் வீச்சரிவாள்களால் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத கும்பல் ராஜாவின் முகத்தை சரமாரியாக வெட்டியதில் அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்தது. பின்னர் கொலை கும்பல் ஒரு வீச்சு அரிவாளை அங்கேயே போட்டுவிட்டு அவர்கள் வந்த காரில் தப்பி ஓடியுள்ளனர்.தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில்,கொலை நடந்த இடத்தில் எஸ்பி மணிவண்ணன் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில், கொலை தொடர்பாக குற்றவாளிகள் 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News