அரசு அதிகாரி என கூறி ரூ.1 கோடி மோசடி - தம்பதி கைது
திருப்பூரில் ஆர்டிஓ பணியில் உள்ளதாக கூறி ஒரு கோடி ரூபாய் வரை பண மோசடி செய்த தம்பதியரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்த கவிதா, என்பவர் பொதுமக்களிடம் தான் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ ஆக வேலை செய்து வருவதாகவும், தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு ஒதுக்கும் பணியில் தான் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கும் வேலை செய்து வருவதாகவும், அரசு பணியில் இருப்பதாக சொல்லி போலி அடையாள அட்டையை காண்பித்து ஆசை வார்த்தை கூறியதை நம்பி, அவிநாசி சேடர்பாளையத்தைச் சேர்ந்த பாமா என்பவர் பணம் ரூ.10,00,000/-த்தை கவிதா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் ஆகியோர்களிடம் ரொக்கமாக கொடுத்துள்ளனர்
பின்னர் அவர்கள் பற்றி விசாரித்ததில், கவிதா என்பவர்ஆர்டிஓ இல்லை என்பதும், போலி அடைாயள அட்டையை பயன்படுத்தியதாகவும், தம்பதியர் இதைப்போன்று பலரிடம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்கி தருவதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும், நம்ப வைத்து சுமார் 1 கோடிக்கு மேல் ஏமாற்றியதாகவும், இது சம்மந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை பெற்று தருமாறு பாமா கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து, கவிதா மற்றும் அவரது கணவர் ராஜ்குமாரை கைது செய்தனர் . இதுவரை 20 -க்கும் மேற்பட்ட நபர்கள் புகார் கொடுத்துள்ளார்கள். இன்னும் பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்து வருகிறார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.