செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.10 லட்சம் பறிமுதல்

Update: 2023-11-09 01:25 GMT
செங்கல்பட்டு ரயில் நிலையம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று  காலை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம்போல் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் பணம் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நின்றபோது போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த காஜா மொய்தீன்(36) என்பவர் தனது பையில் கட்டு, கட்டாக பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம் ரூ.10 லட்சம் இருந்தது. இதுபற்றி போலீசார் அவரிடம் விசாரித்த போது பணத்திற்கான எந்த ஆவணங்களும் இல்லை. மேலும் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து போலீசார் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? ஹவாலா பணமா? என்பது குறித்து காஜா மொய்தீனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் காரில் வந்த இலங்கை தமிழர் உள்பட 4 பேரிடம் ரூ.1 கோடி சிக்கியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News