தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.5 லட்சம் பறிமுதல்!
ஆரணி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-03-23 12:54 GMT
ஆரணி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பென்னகர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன் (வயது 42), நாடக நடிகர். இவரது வீட்டிற்கு பெயிண்டு அடிப்பதற்காக பெயிண்டர் உத்திரபதி, மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய 4 பேரும் இருசக்கர வாகனத்தில் ஆரணியில் உள்ள அம்மு நாடக மன்ற உரிமையாளரிடம் ரூ.12 லட்சம் கடனாக பெற்று பெயிண்டு வாங்குவதற்காக சென்றனர். செய்யாறு - ஆரணி நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை நிலைய அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து மண்டல துணை தாசில்தார்கள் தரணி, குமரன், ரவிச்சந்திரன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.