பச்சமலையில் ரூ.20 கோடி திட்டப்பணிகள் - சப் கலெக்டர் ஆய்வு
கெங்கவல்லி ஒன்றியம் பச்சமலை கிராமத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
கெங்கவல்லி ஒன்றியம், பச்சமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைவாழ்குக்கிராமங்களில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டம், சாலை அமைத்தல், துணைசுகாதார நிலைய புதியகட்டிடம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டபுதிய கட்டிடம், பள்ளி கட்டிடம், தடுப்பு சுவர், பிரதமர் குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணிகளை சேலம் கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சில பணிகள் முடிவடையாமல் இருப்பதை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கினார். மேலும், மங்களம் அருவியை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவித்தால் திட்ட பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டு என ஆலோசனைகளை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டு அறிந்தார்.இந்த ஆய்வின் போது. கெங்கவல்லி பிடிஓ பரமசிவம், தாமரைச்செல்வி, பொறியாளர் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் சின்னமணி பிரேம்குமார். ஒன்றிய குழு உறுப்பினர் கார்த்திக், ஒப்பந்ததாரர் காரல்மார்க்ஸ். ராமச்சந்திரன், வெள்ளையம்மாள் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.பச்சமலையில் ரூ.20 கோடி திட்டப்பணிகள் - சப் கலெக்டர் ஆய்வு