ரூ.24 லட்சம் மோசடி புகாா் : தம்பதி மீது வழக்கு

திருச்சியில் மனை வணிக நிறுவன தொழிலதிபரிடம் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி ரூ. 24 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Update: 2024-02-16 02:59 GMT
பைல் படம் 
திருச்சி தெற்கு தாராநல்லூா் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (37). இவா் மனைவணிகத் தொழில் செய்து வருகிறாா். அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ், அவரது மனைவி பிரதீபா ஆகியோா் அவரிடம் பங்கு வா்த்தகத்தில் ரூ.25 லட்சம் முதலீடு செய்தால், 6 மாதங்களில் வட்டியுடன் சோ்த்து ரூ.50 லட்சமாக இரட்டிப்பாக கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறியுள்ளனா். அதை நம்பிய நந்தகுமாா் ரூ.25 லட்சத்தை கடந்த 2021 ஜூன் 20 தேதி கொடுத்துள்ளாா். ஆனால், குறிப்பிட்டதைப்போல வட்டியோ இரட்டிப்பு தொகையோ தரவில்லை. மேலும் அசலையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளாா். பின்னா் ரூ. 1.33 லட்சம் மட்டும் திருப்பிக்கொடுத்து, இரு காசோலைகளையும் தம்பதி வழங்கியுள்ளனா். ஆனால், அவா்களது வங்கிக் கணக்கில் பணமில்லையென காசோலைகள் திரும்பி வந்துள்ளன. இதுகுறித்து நந்தகுமாா், திருச்சி மாநகரக் குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனா்.
Tags:    

Similar News