மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டினால் 3 ஆயிரம் அபராதம், 7 நாட்கள் தடை - ஆட்டோ சங்கம் அதிரடி

மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டினால் 3 ஆயிரம் அபராதம் மற்றும் 7 நாட்கள் ஆட்டோ ஓட்ட தடை என்ற ஆட்டோ சங்க செயலாளரின் பேச்சு பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Update: 2023-10-30 07:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொரட்டி வ உசி டீசல் ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்க சார்பில் ஆயுத பூஜை நடைபெற்றது. சுமார் 60க்கும் மேற்பட்ட டீசல் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே. சி. வீரமணி, முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினர் டி. கே ராஜா திமுக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்ட பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். பின்னர் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க செயலாளர் குமரேசன் மது அருந்தி வாகனம் ஓட்டாதீர் என்று ஆட்டோவில் ஒட்டி வைத்தால் மட்டும் போதாது ஆட்டோ ஓட்டுனர்களும் மது அருந்தாமல் வாகனத்தை ஓட்ட வேண்டும். மீறினால் 3 ஆயிரம்ரூபாய் அபராதம் விதிப்பது மட்டுமின்றி ஏழு நாட்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் காக்கிச் சட்டை மற்றும் பெயர் வில்லை அணியாமல் ஆட்டோ ஓட்டக் கூடாது.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News