சிவகாசி அருகே தேர்தல் விதிமீறல்கள் ரூ 3.37 லட்சம் பறிமுதல்...
சிவகாசி அருகே தேர்தல் விதிமீறல்கள் ரூ 3.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
Update: 2024-03-25 12:48 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்து 37ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி அருகே கொங்கலாபுரம் சாலையில் தேர்தல் அதிகாரி சபரிகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சிவகாசியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் உரிய ஆணவங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.67 ஆயிரம் மற்றும் சந்திரசேகரன் என்பவர் உரிய ஆணவங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.2லட்சத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சிவகாசி இரட்டை சிலை அருகே உரிய ஆணவங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.70 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.