ரூ. 54 லட்சத்தில் பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள்; முதல்வர் திறந்துவைப்பு

சேலத்தில் ரூ. 54 லட்சத்தில் பள்ளி வகுப்பறைக் கட்டடங்களை, காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

Update: 2023-12-27 10:48 GMT

 சேலத்தில் ரூ. 54 லட்சத்தில் பள்ளி வகுப்பறைக் கட்டடங்களை, காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.  

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் நாகியம்பட்டி, செங்ககட்டில் உள்ள அரசு பள்ளிகளில் தலா ரூ. 27 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்டடம் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் குழந்தை நேயப்பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 27 லட்சத்தில் கட்டப்பட்டது. இந்தக்கட்டத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகியம்பட்டி ஊராட்சித் தலைவர் முத்துராசு, கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலர் ர.ஸ்ரீனிவாஸ், தலைமைாயாசிரியர் ராமகிருஷ்ணன், பள்ளியின் எஸ்.எம்.சி. குழுத் தலைவர் அம்சவேணி,துணைத் தலைவர் ஜோதி, விஏஓ சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.அதேபோல செங்ககட்டு பள்ளியில் ரூ.27 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைக் கட்டடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையாசிரியை செல்வராணி, பிடி.ஏ, எஸ்.எம்.சி. நிர்வாகிகள், ஊராட்சி மன்றத்தினர்,பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News