கிள்ளியூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் தடுப்பு சுவர் - துவக்கி வைத்த அமைச்சர்

கிள்ளியூர் அருகே ரூ.7 கோடியில் வெள்ள தடுப்பு சுவர்  அமைக்கும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

Update: 2023-10-24 01:51 GMT

 பணியை துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், வைக்கலூர் பகுதியில் கடந்த 15ம் தேதியன்று இரவு பெய்த கனமழையின் காரணமாக 16ம் தேதி சிற்றார் அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து பரக்காணி தடுப்பணை ஓரமாக இருந்த 3 வீடுகள் சேதமடைந்தது. அந்த இடத்தில் மேலும் அரிப்பு ஏற்படாதவாறு தண்ணீர் நிரம்பியுள்ள பட்டா நிலத்தில் மண் நிரப்புதல் மற்றும் தடுப்பணையை மேலும் நீட்டித்து கட்ட அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒருங்கிணைந்த சாலை உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று தடுப்பு சுவர் அமைப்பதற்கான பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். இதில் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News