ரூ.2.89 கோடி கல்விக்கடன் ஆணை: கூடுதல் ஆட்சியர் வழங்கல்

தூத்துக்குடியில் கல்விக்கடன் வழங்கும் முகாமில் 64 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2.89 கோடி கல்விக்கடன் ஆணைகளை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரா.ஐஸ்வர்யா, வழங்கினார்.

Update: 2024-02-16 11:50 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

தூத்துக்குடி காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரா.ஐஸ்வர்யா, 64 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2.89 கோடி கல்விக்கடன் ஆணைகளை இன்று வழங்கினார்.

இக்கல்விக் கடன் முகாமில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி உள்ளிட்ட 12 வங்கிகளைச் சேர்ந்த வங்கியாளர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் வழங்க வழிவகை செய்தனர்.

இம்முகாமில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ.ஸ்வர்ணலதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத ஸ்டேட் வங்கி துரைராஜ், காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பூங்கொடி மற்றும் அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News