888 மாணவர்களுக்கு ரூ.31 கோடி கல்வி கடன்
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்விக் கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 888 மாணவ மாணவிகளுக்கு ரூ.31 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Update: 2024-02-07 06:00 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் கடந்த இரண்டாண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கல்விக் கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம்களின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் தற்போது வரை 888 மாணவ மாணவிகளுக்கு ரூ.31 கோடி மதிப்பிலான கல்விக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் உயர்கல்விக் கனவை நிறைவேற்றிடும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவிலான எண்ணிக்கையில் கல்விக் கடனுதவி மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட அனைத்து வங்கிகளின் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றது. என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.