ரூ.4000 கோடி.. அரசு வெள்ளை அறிக்கை வெளியிடணும்...!

தமிழக அரசு 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் வலியுறுத்தினார்.

Update: 2023-12-06 12:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சி ஜங்ஷன் ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு பாஜக சார்பில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருப்பு முருகானந்தம், டாக்டர் அம்பேத்காரின் புகழையும் அவர் இந்த தேசத்திற்காக ஆற்றிய பங்களிப்பையும் பாரதிய ஜனதா கட்சி உலகம் முழுவதும் எடுத்துச் சென்று அவருடைய புகழை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது தொடர்ந்து அச்செயலை செய்வோம் என்றார். சென்னை முழுவதும் வெள்ளை காடாக காட்சியளிக்கிறது.

மக்கள் அனைவரும் வீட்டின் மாடியில் நின்று கொண்டு உணவிற்கும் தண்ணீருக்கும் கையேந்தும் நிலை இன்று உருவாகியுள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , தனது பாதயாத்திரை ரத்து செய்துவிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருக்கிறார். அதேபோல் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண பணிகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்தாலும் புயல் வந்தாலும், மழை வந்தாலும், இதே நிலைமைதான் நீடித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த ஆட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதற்கு ஒரு விடிவு காலம் ஏற்படவில்லை.

ஆகையால் 2026ம் ஆண்டு பாஜக ஆட்சி நடைபெறும் போது இது போன்ற நிலைமை சென்னையில் நிகழாது. தமிழ்நாடு அரசு 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கான எந்த பணியும் நடந்ததாக தெரியவில்லை. ஆகையால் தமிழ்நாடு அரசு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து என்னென்ன திட்ட பணிகள் நடைபெற்றது, அதற்கு எவ்வளவு நிதிகள் செலவிடப்பட்டது . முழுமையாக திட்டங்கள் முடிக்கப்பட்டதா என்பதை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் தெரியவரும் என்றார்.

Tags:    

Similar News