ஆவணம் இல்லாததால் ரூ.53,440 பறிமுதல்
திருப்பூர் முதலிபாளையம் சேர்ந்த செல்வகுமார் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 53,440 பணத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடங்கிய 114 - திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார்ஜிகிரியப்பனவர் மேற்பார்வையில் திருப்பூர் தெற்கு வட்டம் காங்கேயம் சாலை பெம் பள்ளி அருகில் ஆய்வாளர் (உள்ளாட்சி நிதி தணிக்கை) தமிழரசு வாகன தணிக்கையின்போது முதலிபாளையம் டேன் காலனியை சேர்ந்த செல்வகுமார் என்பவரது நான்கு சக்கர வாகனத்தினை சோதனை செய்தபோது முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 53,440 கொண்டு சென்றது தெரியவந்தது.
தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை குழு பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் தேர்தல் கணக்கு (பொ)தங்கவேல்ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது.