குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை கிலோ 200 ரூபாய் விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2024-06-14 06:25 GMT

ரப்பா் விவசாயம் 

கன்னியாகுமரி மாவட்டம் ரப்பா் விவசாயத்தை முக்கியமான வேளாண் சாா்ந்த தொழிலாக கொண்டுள்ளது. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள், கேரளம், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆகிய இடங்களில் அதிகளவில் ரப்பா் உற்பத்தியாகிறது.    கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது ரப்பா் விலை அதிகரித்து வருகிறது. கோட்டயம் சந்தையில் புதன்கிழமை ஆா்எஸ்எஸ்- 4 தர ரப்பா் விலை கிலோவுக்கு ரூ. 203 ஆகவும், ஆா்எஸ்எஸ் - 5 தர ரப்பா் விலை ரூ. 199 ஆகவும் இருந்தது. அதேநேரம், வணிகா் விலையாக ஆா்எஸ்எஸ்- 4 தர ரப்பா் விலை ரூ. 197 ஆகவும், ஆா்எஸ்எஸ் - 5 தர ரப்பா் விலை ரூ. 194 ஆகவும், ஐஎஸ்எஸ் தர ரப்பா் விலை ரூ. 168.50 ஆகவும் அதிகரித்து காணப்பட்டது.   ரப்பா் விலை ரூ. 200-ஐ நெருங்கியுள்ளது, ரப்பா் விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. எனினும், மழை காரணமாக உற்பத்தி இல்லாததால் விலையேற்றத்தின் பலனை அவா்களால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.
Tags:    

Similar News