பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.;
Update: 2023-12-08 11:55 GMT
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாக்கம் கிராம அரசு உயர்நிலைப்பள்ளியின் மாணவர் போலீஸ் படை மாணவர்கள் மதுராந்தகம் நகர காவல் நிலையத்தை தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். மதுராந்தகம் நகர காவல் ஆய்வாளர் தர்மலிங்கம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காவலர்கள் முரளிகண்ணன் , தனிப்பிரிவு சிறப்பு காவலர் கவியரசன், சுபாஷ் சந்திர போஸ், நிர்மல் குமார், ஆகியோர் மாணவர்களுக்கு பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்தும் மற்றும் மது, போதை பொருள்களின் தீமைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், சிறப்பாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். உடன் பள்ளி ஆசிரியர்கள் இருந்தனர்.