சம்பளம் மாற்றி வரவு வைக்கப்பட்ட விவகாரம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி

100 நாள் வேலைக்கான சம்பளத்தை வேறு நபருக்கு வரவுவைத்து ஏமாற்றியவர்கள் மீது மாவட்டஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2023-11-09 03:51 GMT

மனு அளிக்க வந்த அனிதா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 மயிலாடுதுறை அருகே திருச்சிற்றம்பலம் ஊராட்சியை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி அனிதா, இவர் 100நாள் வேலை திட்டத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார், ஆனால் சம்பளப்பணம் கண்ணன் என்ற நபருக்கு வரவாகியுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அனிதா வங்கி கணக்கதில் 1 ரூபாய்கூட வரவாகவில்லை. வங்கி, ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றில் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. விடாமல் 100 நாள் வேலைக்கும் சென்றுவந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 6ஆம் தேதி மனு அளித்திருந்தார். ஆய்வு மேற்கொண்டதில் பணியாளர்கள் செய்த தவறு என்பதும்,அதை திருத்திக் கொள்ளாமல் பணத்தையும் கையாடல் செய்ததும்  தெரியவந்தது. இச்செயலுக்கு காரணமான பணித்துணையாளர் கல்பனா, மகேஸ்வரி ஆகியோரிடம் தொகை வசூல் செய்யப்பட்டு அனிதாவின் வங்கிக் கணக்கில் 13,370 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. மீதம் 12,000 ரூபாயை அதற்கு பொறுப்பான பணியாளரிடம் வசூலிக்கவும், சம்பந்தப்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News