காரிமங்கலத்தில் ரூ.12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை
காரிமங்கலம் தேங்காய் வாரச் சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Update: 2024-04-16 03:28 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் நேரத்தில் பிரத்தியேகமாக தேங்காய்கள் சந்தை நடைபெற்று வருகிறது மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தேங்காய் வாரச் சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் ஒன்றரை லட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அளவு மற்றும் ரகத்தைப் பொறுத்து ஏழு ரூபாய் முதல் 12 ரூபாய் வரை தேங்காய்கள் விற்பனையானது. மேலும் நேற்று ஒரே நாளில் 12 லட்சத்திற்கு தேங்காய்கள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.