அதியமான் கோட்டையில் ஆடுகள் விற்பனை அமோகம்

அதியமான் கோட்டை காளியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது

Update: 2024-04-02 06:04 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட அதியமான் கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வள்ளல் அதியமான் வணங்கிய அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் கடந்த வாரம் தேர் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் நல்லம்பள்ளியில் நடைபெறும் வாரச் சந்தை காளியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறும் இரண்டு வாரம் மட்டும் சிறப்பு சந்தையாக அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த வாரம் இரண்டாவது வார சந்தை இன்று காலை 6:00 மணிக்கு கூடியது தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர்.

சிறிய அளவிலான ஆடுகள் 2000 ரூபாய் முதல் பெரிய அளவில் ஆடுகள் 24,000 ரூபாயில் வரை விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் 90 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News