நிலக்கடலை வரத்து சரிவு படி ரூ.80-க்கு விற்பனை
Update: 2024-01-03 09:26 GMT
நிலக்கடலை வரத்து சரிந்தது படி ரூ.80-க்கு விற்பனை தர்மபுரி, ஜன.3: தர்மபுரி மாவட்டத்தில்.மானாவாரியாக நிலக்கடலை சுமார் 10 ஆயிரம் ஏக்கரில்.சாகுபடி வாரச்சந்தையில் நிலக்கடலை வரத்து சரிந்தது. இதனால், படி ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, மொரப்பூர்,அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம்,பென்னாகரம், நல்லம்பள்ளி உள்பட 10 ஒன்றியங்களிலும் அதிகளவில்.எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழையை நம்பி வைகாசி பட்டத்தில் (மே மற்றும் ஜூன் மாதங்களில்) நிலக்கடலை நடவு செய்யப்படும்.இதேபோல் வடகிழக்கு பருவ மழையை நம்பி அக்டோபர், நவம்பர் மாதத்தில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படும். மாவட்டம்.முழுவதுமாக மானாவாரியாக நிலக்கடலை சுமார் 10 ஆயிரம் ஏக்கரில்.சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை குறைவாக பெய்துள்ளது. நல்லம்பள்ளி, தொப்பூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலக்கடலை அறுவடை நடந்து வருகிறது. தொப்பூர் வாரசந்தையில் வரத்து சரிவால் படி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.