குட்கா விற்பனை - 12 கடைகளுக்கு சீல்
Update: 2023-12-21 07:53 GMT
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை 'சீல்' வைத்தனா்.திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் கலைவாணி தலைமையில் திண்டுக்கல், ஆத்தூா், கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வின்போது, 12 கடைகளில் 24 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, 12 கடைகளுக்கும் 'சீல்' வைத்த அலுவலா்கள், கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.80ஆயிரம் அபராதம் விதித்தனா்.