புகையிலை பொருட்கள் விற்பனை: இரண்டு கடைகளுக்கு சீல்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தர்மபுரி மாவட்டம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை 2 கடைகளுக்கு சீல். தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைப்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்,காவல் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய ஏழு குழுக்கள் உருவாக்கப்பட்டு தினம் தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மளிகைக் கடைகள், பெட்டி கடைகள், பீடா கடைகள், ஹைவே டீ கடைகள் மற்றும் தாபா பள்ளி, கல்லூரி அருகில் மூழு கவனத்துடன் செயல்பட்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை அறவே இல்லாமல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் , அபராதம் மற்றும் கடை செயல்பட தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடத்தூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் பகுதியில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் முருகன் உடன் கடத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், சேகர் மற்றும் சாமிதுரை உள்ளிட்ட குழுவினர்
புதுரெட்டியூர் செல்லும் சாலை பேருந்து நிலைய ஓட்டி உள்ள பகுதியில் ஒரு மளிகை கடை மற்றும் புட்டிரெட்டிபட்டியில் ரயில்வே கேட் பகுதியில் ஒரு மளிகை கடை என இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக இரண்டு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.