தண்ணீர் மண்பானை அதிக அளவில் விற்பனை !
திண்டுக்கல் அருகே கோடைகாலத்தை முன்னிட்டு தண்ணீர் மண்பானையை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-29 07:02 GMT
மண் பானை
கோடைகாலத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் தண்ணீர் மண்பானை விற்பனை சூடுபிடித்துள்ளது. பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.இயற்கை முறையில் குடிநீரை குளிர்விக்கும் மண்பானை மீது பொதுமக்கள் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். இதன்காரணமாக தற்போது திண்டுக்கல்லை அடுத்த நொச்சி ஓடைப்பட்டி அருகே மண்பானை விற்பனையும் அதிகரித்து வருகிறது. இந்த வகை மண்பானைகள் ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.