சேலம் : கஞ்சா விற்ற 8 பேர் கைது - வாகனங்கள் பறிமுதல்

சேலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-22 06:18 GMT

பைல் படம் 

சேலம் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். இதனிடையே வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அல்லிக்குட்டை ஏரிப்பகுதியில் ஒரு கும்பல் இருப்பது தெரிந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து கிச்சிபாளையத்தை சேர்ந்த விக்ரம் (வயது 22), காசி பிரசாத் (23), உமர் பரூக் (23), சின்னத்திருப்பதியை சேர்ந்த பிரகாஷ் (21), அல்லிக்குட்டையை சேர்ந்த தேவபிரகாஷ் (18) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்கள், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News