தேர்தல் பயிற்சியில் 946 ஆசிரியர்கள் ஆப்சென்ட் - விளக்க நோட்டீஸ்

தேர்தல் பயிற்சி முகாமில் பங்கேற்காத 946 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-03-28 06:20 GMT

பைல் படம் 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் என 16 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதில் கல்வித்துறையில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட உள்ளனர்.

அவர்களுக்கு தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும்? என்பது குறித்த முதற்கட்ட பயிற்சி முகாம் 11 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 24-ந் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஆசிரியர்கள் 946 பேர் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவர்களிடம் எதற்காக கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும் போது, தேர்தல் பயிற்சி முகாமில் பங்கேற்காத 946 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் மருத்துவ விடுப்பில் உள்ளவர்கள், மகப்பேறு விடுப்பில் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெரும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர் என்றனர்.

Tags:    

Similar News