சேலம் மத்திய சிறையில் கைதியிடம் 2 செல்போன், சிம்கார்டு பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் கைதியிடம் 2 செல்போன், சிம்கார்டு பறிமுதல். சிறை அதிகாரிகள் நடவடிக்கை.

Update: 2024-04-13 09:49 GMT

சேலம் மத்திய சிறை

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் நவாஷ் (வயது 50). ஓசூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தங்கி இருந்த அறையில் சிறைக்காவலர்கள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது 2 செல்போன் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நவாஷ் அடைக்கப்பட்டு உள்ள அறையில் சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 2 செல்போன், ஒரு சிம்கார்டு, ஒரு பேட்டரி, சிறிதளவு கஞ்சா துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்துள்ளோம். அவரிடம் விசாரணை நடத்தியபோது கடந்த 2 மாதத்திற்கு முன்பு சிறைக்கு வரும்போதே மறைத்து எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து நவாஷ் மீது அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளோம் என்று கூறினார்.
Tags:    

Similar News